உலகம்

தெரேசா மேயின் பதவி விலகல் குறித்த அறிவிப்பு இன்று?

பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய், தமது பதவி விலகல் திகதியை இன்று அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவரை மேற்கோள்காட்டி, பி.பி.சி. இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
ப்ரெக்ஸிட் விவகாரத்தினால் பெரும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள தெரேசா மே, புதிய ப்ரெக்ஸிட் ஒப்பந்தத்துக்கு ஆளும்கட்சியின் ஆதரவைப்பெற்றுக் கொள்வதற்காக பதவி விலகுவதாக கூறி இருந்தார்.
இதன்படி அவர் பதவி விலகுவது மற்றும் புதிய பிரதமர் தெரிவு வரையான கால அட்டவணை ஒன்றை இன்று அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்தகால அட்டவணையானது ஜுன் மாதம் 10ம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று நம்பப்படுகிறது.
அதேநேரம் இன்று ஆளுங்கட்சியின் பின்வரிசை உறுப்பினர்களது தலைவரை சந்தித்து தெரேசா மே கலந்துரையாடவுள்ளார்.