இலங்கை

தெரிவுக்குழு முன் அதிகாரிகள் வேண்டும் – சபாநாயகர் அலுவலகம் அதிரடி அறிவிப்பு

 

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டால் அதிகாரிகள் ஆஜராகியாக வேண்டுமெனவும் அல்லாத பட்சத்தில் அதன் அனுகூலங்கள் என்ன என்பது அவர்களுக்கு தெரியுமென்றும் சபாநாயகர் அலுவலகம் பரபரப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தாக்குதல் சம்பந்தமான பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் இனி பாதுகாப்பு அதிகாரிகள் ஆஜராக மாட்டார்களென ஜனாதிபதி நேற்று அறிவித்த சூழ்நிலையில் சபாநாயகரின் இந்த நிலைப்பாட்டை அவரது அலுவலகம் வெளியிட்டுள்ளது.

எந்த சந்தர்ப்பத்திலும் நிறைவேற்று அதிகாரத்திற்கு எதிராக பாராளுமன்றம் செல்லாத ஒரு சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்ற செயற்பாடுகளில் தலையிடுவது சரியானதா என்றும் அறிக்கை ஒன்றில் சபாநாயகர் அலுவலகம் கேள்வி எழுப்பியுள்ளது.