Breaking News

தெரிவுக்குழுவை ரத்துச் செய்யமாட்டோம் – சபை முதல்வர் சற்றுமுன் அறிவிப்பு !

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்து ஆராயும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழுவினை இரத்துச் செய்வீர்களா என்று ஜேவி எம் பி பிமல் ரத்நாயக்க சற்று முன் பாராளுமன்றத்தில் கேட்டார்.

அதற்கு பதில் வழங்கிய சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, அப்படி ஒன்றும் நடக்காதென தெரிவித்தார்.

இன்று ஜனாதிபதி அமைச்சரவை கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில் – தெரிவுக்குழு விவகாரம் அதில் பேசப்படலாமென தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சபையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது