இலங்கை

தெரிவுக்குழுவை நிறைவேற்றதிகாரம் தீர்மானிக்க முடியாது – சுமந்திரன் அதிரடி !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் எதிர்காலத்தை தீர்மானிக்க முடியாதென தெரிவித்தார் தெரிவுக்குழுவின் உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான சுமந்திரன் எம் பி.

மேற்படி தெரிவுக்குழுவை ரத்துச் செய்யுமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுதிருப்பது குறித்து கேட்ட போது இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் ,” தெரிவுக்குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது பாராளுமன்றத்தின் வேலை .அது நிறைவேற்றதிகாரத்தின் வேலையல்ல.எனக்குத் தெரிந்தவரை தெரிவுக்குழுவின் செயற்பாடு தொடரும் ” என்றார் சுமந்திரன்.

– அரசியல் நெருக்கடி–

தெரிவுக்குழுவை ரத்துச் செய்யாதபட்சத்தில் மீண்டும் அமைச்சரவையை கூட்டப்போவதில்லையென்று ஜனாதிபதி அறிவித்துள்ள நிலையில் மீண்டுமொரு அரசியல் நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.