Breaking News

தெமட்டகொடையில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து பொலிஸ் தீவிர விசாரணை !

 

தெமட்டகொட , மஹாவில ஒழுங்கையில் இன்று காலை வீடொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் காயமடைந்து தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து விசாரணை செய்ய சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ், எரிவாயு சிலிண்டர் வெடித்த காரணத்தினால் இந்த வெடிப்புச் சம்பவம் ஏற்பட்டதாக அறிந்துள்ளது.