இலங்கை

தென் மாகாணத்தில் சவப்பெட்டியுடன் ஆர்ப்பாட்டம் !

அரசின் ஜனநாயக விரோத செயற்பாடுகளை கண்டித்தும் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தென் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் இன்று மாகாணசபை முன்பாக சவப்பெட்டியை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பிய அவர்கள் மலர்வளையத்துடன் சபைக்குள் பிரவேசிக்க முயன்றனர்.