உலகம்

தென் கொரியாவில் 46 நாட்களாக தொடர் மழை: 30 பேர் உயிரிழப்பு

தென் கொரியாவில் 46 நாட்கள் பெய்த கனமழைக்குப் பின்னர் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் பயங்கர நிலச்சரிவில் சிக்கி, 30பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 12பேர் காணாமல் போயுள்ளனர்.

ஏழு ஆண்டுகளில் நாட்டின் மிக நீண்ட பருவமழை அங்கு பதிவாகியுள்ளதால், தெற்கு பகுதியில் உள்ள சில மாகாணங்களில் வசிக்கும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் மழை பெய்ததால், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 6,000பேர் வெளியேற்றப்பட்டதாக நாட்டின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பேரழிவில் குறைந்தது எட்டு பேர் காயமடைந்துள்ளதாக மத்திய பேரிடர் மற்றும் பாதுகாப்பு எதிர் தலைமையகத்தை மேற்கோள் காட்டி யோன்ஹாப் செய்தி வெளியிட்டுள்ளது.