இலங்கை

தென்பகுதி மீனவர்களால் கடல்வளம் பாதிக்கப்படுவதாக வடமராட்சி கிழக்கு மீனவர்கள் முறைப்பாடு !

– வன்னி செய்தியாளர் –

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதிகளில் தங்கியிருந்து தொழில் புரிந்துவரும் தென்பகுதியினை சேர்ந்த கடற்தொழிலாளர்களால் கடல்வளங்கள் அழிவடைந்து வருகின்றதோடு கடல் வளங்களும் பாதிக்கப்படுகின்றது என தெரிவித்து வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலாளருக்கு மனு கையளித்துள்ளார்கள்.

முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட உட்பட்ட சாலைப்பகுதியில் தங்கியுள்ள தென்னிலங்கை கடற்தொழிலாளர்கள் 500ற்கும் மேற்பட்ட படகுகள் வைத்து தொழில் செய்து வருகின்றார்கள். இவர்களுக்கான தொழில் அனுமதி கடற்தொழில் அமைச்சினால் கொடுக்கப்பட்ட போதும் அட்டை பிடிப்பு என்ற பெயரில் அனுமதியினை பெற்று சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதால் வடக்கில் முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டம் சாலை பகுதிக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளான மாவட்ட செயலாளர்,கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரி,பிரதேச செயலாளர்,மற்றும் வடமாகாணஆளுனர்,கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசம் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன்,மன்னார் சமூகபொருளாதார மேம்பாட்டுக்கனா நிறுவன இயக்குனர் உள்ளிட்டவர்களுக்கு மனு 26.06.19 இன்று கையளித்துள்ளார்கள்.குறித்த அதே மனுவினை 26.06.19 (இன்று ) சுண்டிக்குளம் கடற்தொழிலாளர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபரிடம் ஒப்படைக்க சென்றபோதும் அங்க அவர் இல்லாத காரணத்தால் அதிகாரிகளிடம் கையளித்துவிட்டு சென்றுள்ளார்கள்.

இவ்வாறான சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கை கட்டுப்படுத்தப்படாவிடின் முல்லைத்தீவு யாழ்ப்பாணம் மாவட்டத்தினை ஒன்றிணைத்து கடற்தொழிலாளர்கள் பாரிய போராட்டத்தினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இது தொடர்பில் அவர்கள் கையளித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

முல்லைத்தீவு மாவட்டத்தில் தென்னிலங்கை பகுதியில் இருந்து அட்டை பிடிப்பு தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் சாலைப்பகுதியில் நிலைகொண்டு 40 குதிரைவலுகொண்ட இயங்திரங்களை பாவித்து இரவு பகலாக சாலையில் இருந்து யாழ்ப்பாணம் காங்சேன் துறைவரை தமது சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதனால் கரையோர வளம் பாதிக்கப்பட்டுள்ளது,கரைவலைதொழில் செய்பவர்களின் கம்பான்களை வெட்டுவதும் வலைகளை வெட்டுவதும் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது.

கடலில் சங்குகளை எடுப்பதும் பாரிய ஆயுதங்களால் மீன்களை குத்திப்பிடிப்பதும்,சுருக்கு வலைகளை பயன்படுத்துவதும்,குண்டுவைத்து மீன்களை பிடித்தும் அழித்து வருகின்றார்கள்.

அட்டை பிடிப்பு என்ற பெயரில் வந்து பலநோக்கங்களை வடகடலில் உள்ள வளங்களை அள்ளி செல்கின்றார்கள் அத்துடன் சட்டவிரோத மதுபோதைகள் உள்ளிட்டவற்றையும் கடத்துகின்றார்கள்.

எனவே எமது மக்களின் வளங்களையும்,வாழ்வாதாரத்தினையும்,பாதுகாத்து தருமாறு அரச அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.