விளையாட்டு

தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபையில் சிக்கலா?

உலகக் கிண்ண கிரிக்கட் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றிருந்த தென்னாப்பிரிக்க வீரர்களை முன்னதாகவே நாடு திரும்புமாறு அதன்பயிற்றுவிப்பாளர் ஒட்டிஸ் கிப்சன் கோரி இருந்தார்.
எனினும் இந்த விடயத்தை தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபையின் பிரதம நிறைவேற்றாளர் தபாங் மோரோ, இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையுடன் கலந்துரையாடியிருக்கவில்லை.
முன்னதாகவே தமது வீரர்களை நாட்டுக்கு அழைத்தால், 2020-21ல் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு மேற்கொள்ளவுள்ள சுற்றுத் தொடர் பாதிக்கும் என்று கருதியதே இதற்கான காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் தென்னாப்பிரிக்க கிரிக்கட் சபை 654 மில்லியன் ரூபாய்கள் நட்டமைடைந்துள்ளநிலையில், இந்தியாவின் சுற்றுத்தொடர் புதிய வருவாயை வழங்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது.
ஆனால் இந்த விடயம் பயிற்றுவிப்பாளருக்கும் கிரிக்கட் சபைக்கும் இடையில் சலசலப்பை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.