விளையாட்டு

தென்னாப்பிரிக்கா மேற்கிந்திய தீவுகள் இன்று மோதல்

உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் 15வது லீக் போட்டி இன்று நடைபெறவுள்ளது.

சவுத்தம்டனில் நடைபெறும் இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகளும் தென்னாப்பிரிக்காவும் மோதுகின்றன.

தென்னாப்பிரிக்கா எதிர்கொண்ட 3 லீக் போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றிபெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் தென்னாப்பிரிக்கா பல்வேறு மாற்றங்களுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் மேற்கிந்திய தீவுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை எதிர்பார்க்க முடியாது.