சினிமா

தென்னாபிரிக்கா செல்லும் “வலிமை” படக்குழு

நடிகர் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கி வரும் படம் ‘வலிமை’. இந்த படத்தை நேர்கொண்ட பார்வை படத்தை தயாரித்த போனி கபூரே தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகி ஒரு ஆண்டுக்கும் மேலாகிவிட்ட நிலையிலும் இதுவரை டைட்டில் போஸ்டரோ, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரோ வெளியாகாமல் எந்த வித அப்டேட்டும் இல்லாமல் இருந்து வருகிறது.

இந்த படத்தில் அஜித்துடன் ஹூமா குரேஷி மற்றும் கார்த்திகேயா ஆகியோர் நடித்து வருகின்றனர். ஆனால் இந்த படத்தை பற்றிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட இதுவரை வெளிவரவில்லை. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஏமாற்றத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இப்போது வலிமை படத்தின் முக்கியமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் முக்கியமானக் காட்சிகளை முன்பு ஐரோப்பிய நாடுகளில் எடுக்க முடிவு செய்திருந்த நிலையில் இப்போது புனேவில் அந்த காட்சிகளை படமாக்கி வருகிறாராம் இயக்குனர் ஹெச் வினோத்.

இதையடுத்து அடுத்த கட்டமாக படத்தில் இடம்பெறும் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்க தென் ஆப்பிரிக்காவுக்கு செல்ல உள்ளதாம் படக்குழு. அங்கு படத்தின் பெரும்பாலானக் காட்சிகளை படமாக்கி படத்தை முடிக்க உள்ளனர் என சொல்லப்படுகிறது.