விளையாட்டு

தென்னாபிரிக்காவை வீழ்த்தி இந்தியா முதல் வெற்றி !

இந்திய மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இந்திய அணி 6 விக்கட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பாடிய தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 227 ஓட்டங்களைப் பெற்றது.

228 என்ற இலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய அணி 47.3 ஓவர்களில் 4 விக்கட்டுகளை இழந்து 230 ஓட்டங்களைப் பெற்ற வெற்றியீட்டியது.

ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 122 ஓட்டங்களைப் பெற்றார்.

உலகக்கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்க அணி விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியை அடைந்துள்ளது.