உலகம்

தென்கொரியா செல்கிறார் ட்ரம்ப்

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த வாரம் தென்கொரியாவிற்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்கிறார்.

அங்கு அவர் தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்து முக்கிய கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் சனிக்கிழமை ட்ரம்ப் தென்கொரியா செல்வதானது, வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்படும் சாத்தியத்தை அதிகப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

வடகொரியா அணு ஆயுத உற்பத்தித் திட்டங்களை கைவிட்டால் பேச்சுவார்த்தை மீள ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்து, ட்ரம்ப், வடகொரிய தலைவருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தமை குறிப்பிடத்தக்கது.