இலங்கை

துறைமுக தொழிற்சங்கம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (29) முதல் தொழிற்சங்க நட வடிக்கையினை முன்னெடுக்க தயார் என துறைமுக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கிழக்கு முனையத்தைப் பாதுகாப்பதற்கான தேசிய இயக்கத்தின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்து இலங்கை துறைமுக பொது ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தைப் பாதுகாக்கும் போராட்டத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் வலுவான தொழிற்சங்க நடவடிக்கையை மேற்கொள்ளத் துறைமுக தொழிற்சங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.