Breaking News

துறைமுக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை ஆரம்பித்தனர்!

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு இறங்குதுறையின் கிரேன் தரிப்பு விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை ஒன்றையடுத்து கொழும்புத் துறைமுக ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இதனால் துறைமுகத்தின் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

முன்னதாக இன்று காலை தொழிற்சங்கங்களுக்கும் துறைமுக அமைச்சுக்கும் இடையில் நடந்த பேச்சு தோல்வியில் முடிவடைந்தது.இன்று பிற்பகல் மற்றுமொரு பேச்சு நடக்கவுள்ளது.