உலகம்

துருக்கியும் ரஷ்யாவும் வரலாற்று ஒப்பந்தம் 

துருக்கியுடனான, சிரிய எல்லையிலிருந்து குர்திஷ் படைகளை அகற்றுவது தொடர்பிலான வரலாற்று ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள, துருக்கியும் ரஷ்யாவும் இணக்கம் வெளியிட்டுள்ளன.

துருக்கி இந்த மாதம் ஆரம்பத்தில், குர்திஷ் படைகளை சிரியாவின் தெற்கு எல்லையிலிருந்து அகற்றி, அந்த பிரதேசத்திவ் ஒரு பாதுகாப்பு வலையத்தை உருவாக்கும் நோக்குடன் தாக்குதலைத் ஆரம்பித்திருந்தது.

ரஷ்யா, சிரிய ஜனாதிபதி பஷhர் அல்-அசாத்தின் நட்பு நாடு என்ற வகையில், சிரியாவில் வெளிநாடுகளின் தலையீடு குறித்து கவலை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், துருக்கியும் ரஷ்யாவும்  எல்லையில் கூட்டு ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவுள்ளன.

அமெரிக்காவின் அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில், எதிர்பாராத வகையில் துருக்கி எடுத்துள்ள இந்தத் தீர்மானமானது, பிராந்தியத்தில் துருக்கிய மற்றும் ரஷ்யாவின் செல்வாக்கை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போர் நிறுத்தம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தாக்குதலை மீண்டும் ஆரம்பிக்கத் தேவையில்லை என, ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பின்னர்இ துருக்கி கூறியுள்ளது.

மேலும், குர்திஷ் போராளிகள் துருக்கிய பாதுகாப்பு வலையத்திலிருந்து, விலகியுள்ளனர்.