உலகம்

துருக்கியில் எர்டோகனுக்கு பின்னடைவு

நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் தலைவர் எர்டோகன் 2003 ஆம் ஆண்டில் இருந்து துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் அதேசமயம் மேற்குலக நாடுகளுக்கும் கடும் சவாலாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அங்காராவில் நடைபெற்ற தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் குடியரசுக் கட்சி (சி.என்.பி.) 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது, அதே நேரத்தில் ஏ.கே.பீ. 47 சதவீதத்தினை பெற்றுள்ளது..25 ஆண்டுகளில் பிரதான இஸ்லாமியக் கட்சி தலைநகரில் அதன் பிடியை இழந்துவிட்டமை இதுவே முதல் தடவையாகும்.