Breaking News

தும்மலசூரிய இளைஞர் யாழில் கைது

 

யாழ்ப்பாண மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடிய முஸ்லிம் இளைஞர் ஒருவரை இன்று மதியம் கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாண மாவட்ட செயலக சூழலில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஓர் இளைஞன் நடமாடியுள்ளார். அவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் 33 வயதுடைய தும்மலசூரிய பொலிஸ் பிரிவில் வசிக்கும் இளைஞன் என இனம் காணப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்துக்கு மாலைகள் விற்பனை செய்யவே தான் வருகைதந்ததாக அவர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 

( jaffna reporter )