துணை ஜனாதிபதியின் பெயரை வர்த்தக செயல்பாடுகளுக்காக பயன்படுத்த தடை – கமலா ஹாரிஸ் தங்கை மகளுக்கு வெள்ளை மாளிகை எச்சரிக்கை
அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிசின் பெயரை, வர்த்தக செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக் கூடாது என்று அவரது தங்கை மகளான மீனா ஹாரிசிடம் வெள்ளை மாளிகை அறிவுறுத்தியுள்ளது.
தான் எழுதும் புத்தகங்கள் மற்றும் ஆடைகளை விற்பனை செய்ய கமலா ஹாரிசின் பெயரை பிரான்டாக மீனா ஹாரிஸ் பயன்படுத்துவதாக முறைப்பாடு எழுந்ததை அடுத்து அதனை நிறுத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய கமலா ஹாரிசின் செய்தி தொடர்பாளர், வர்த்தக நோக்கங்களுக்காக துணை ஜனாதிபதியின் பெயரைப் பயன்படுத்தக் கூடாது என்பது வெள்ளை மாளிகையின் கொள்கை என்றார். துணை ஜனாதிபதியின் குடும்பம் நெறிமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யும் என்றும் தெரிவித்தார்.