இலங்கை

தி.மு.க தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்தினார் ஹக்கீம்

 

தனிப்பட்ட விடயமாக தமிழகம் சென்றுள்ள ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இன்று (24) தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னையிலுள்ள தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

தி மு க தலைவராக ஸ்டாலின் தெரிவு செய்யப்பட்டமைக்கு வாழ்த்தினை தெரிவித்த ஹக்கீம் ,செப்ரெம்பரில் நடைபெறவுள்ள தனது புதல்வியின் திருமண நிகழ்வுக்கான அழைப்பிதழையும் வழங்கினார்.