இலங்கை

திவயினயில் வெளியான செய்தி குறித்து விசாரணை கோரும் ஜேவிபி

 

முஸ்லிம் வைத்தியர் ஒருவர் சுமார் 4000 சிங்கள பௌத்த தாய்மார்களுக்கு குடும்பக்கட்டுப்பாடு செய்திருப்பதாக இன்றைய திவயின பத்திரிகையில் செய்தி வெளியாக்கப்பட்டிருந்தது.

குறித்த வைத்தியர் தேசிய தௌஹீத் ஜமாத் உறுப்பினர் என்றும் கூறப்பட்டது.

இதுதொடர்பில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, இதன் உண்மைத்தன்மை குறித்து பாராளுமன்றம் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தாம் இந்த செய்தியை இன்று காலை அவதானித்ததாகவும், அதுதொடர்பாக பொலிசாரையும் புலனாய்வுப் பிரதானியையும் தொடர்பு கொண்டு கேட்ட போதும், அவ்வாறான எந்த தகவலும் தங்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்று கூறியதாகவும் சபாநாயகர் பதிலளித்தார்.

இந்த விடயத்தின் உண்மையான விபரங்களை நாளையதினத்துக்குள் பாராளுமன்றில் முன்வைக்குமாறு அனுரகுமார திஸாநாயக்க கேட்டுக் கொண்டார்.