Breaking News

திலீபன் நினைவேந்தல் தடை நீடிப்பு !

 

– யாழ். நிருபர் –

‘தியாக தீபம்’ திலீபனின் நினைவேந்தலுக்கு விதிக்கப்பட்ட தடையை இரு வாரங்களுக்கு நீடித்து யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் கட்டளையிட்டுள்ளது.

இலங்கையில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதியளிக்க நீதிமன்றினால் முடியாது என்றும் கட்டளையிடப்பட்டது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் ஊடாக இலங்கை குற்றவியல் நடைமுறை சட்டக் கோவை 106ம் பிரிவின் கீழ் பொதுத் தொல்லை ஏற்படும் என்று பொலிஸாரால் யாழ் நீதிமன்றத்தில் பி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து 14ம் திகதி திலீபனின் நினைவேந்தலுக்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மறுநாள் இடம்பெற்ற மீளாய்வு விசாரணையை தொடர்ந்து தடை உத்தரவு உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மீளவும் தடையை நீக்குவதாக அல்லது நீடிப்பதா என்ற மீளாய்வு உத்தரவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தடை நீடிக்கப்பட்டுள்ளது.