இலங்கை

திருமலை-மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து: ஒருவர் பலி

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் சீமெந்து லொறியில் மோதுண்டு 65 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை பச்சைநூர் சந்திக்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சீமெந்து லொறி ஒன்றில் மோதுண்டதால் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருவதுடன், உயிழந்த நபர் இன்னமும் அடையாளங்காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.