Breaking News

திருமலை பிரதேச செயலக உத்தியோகத்தர் கொழும்பில் கைது !

திருகோணமலை வெருகல் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் இலிகிதர் ஒருவர் நேற்று கொழும்பில்  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

பிரதேச செயலகத்தில் தேசிய அடையாள அட்டை பிரிவில் கடமையாற்றும் ஏறாவூரை சேர்ந்த ஒருவர் நேற்று கொழும்பு தலைமை அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் விசாரணைகளுக்காக அவர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேசமயம் ஏறாவூரிலுள்ள அவரது வீட்டிலும் பொலிஸார் விசாரணைகளை நடத்தியுள்ளனர்.