Breaking News

திருமலை பஸ் விபத்தில் ஒருவர் பலி – பலர் காயம் !

கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி சென்றுகொண்டிருந்த சொகுசு பஸ் தம்பலகாமம் 99 ஆம் கட்டை அருகே இன்று அதிகாலை விபத்துக்குள்ளானதில் பஸ் நடத்துனர் உயிரிழந்தார்.

தரித்து நின்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்ஸின் பின்னால் வேகத்துடன் இந்த சொகுசு பஸ் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் திருகோணமலை தள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.