இலங்கை

திருமலையில் விபச்சார விடுதியொன்று முற்றுகை

திருகோணமலை தலைமையகப் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மத்திய வீதியில் பாடசாலையின் எதிரே நீண்டகாலமாக தசைப்பிடிப்பு நிலையம் என்கின்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார நிலையம் ஒன்று இன்று (27) தலைமையகப் பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டது.

சம்பவத்தில் மூன்று பெண்கள் உள்ளிட்ட விடுதி உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விடுதி மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டதுடன் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த தலைமையகப் பொலிஸார் நடவடிக்கைகள மேற்கொண்டுள்ளனர்.