இலங்கை

திருமண நிகழ்வில் பங்கேற்ற 12 பேருக்கு கொரோனா தொற்று..!

அலுத்கம-களுவாமோதர பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றில் பங்கேற்றிருந்த 35 பேருக்கு ரெபிட் என்டிஜன் பரிசோதனை மேற்கொண்டதில் 12 பேருக்கு கொவிட் 19 வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக அலுத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், குறித்த அனைவரும் தற்போது தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அலுத்கம பொலிஸ் நிலைய கொவிட் 19 தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, குறித்த திருமண மண்டபம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.