Breaking News

திருப்பதியில் ” ஷொக் ” கொடுத்த மைத்ரி  !

திருப்பதிக்கு தனிப்பட்ட பயணமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று மாலை அங்குள்ள வர்த்தக கட்டிடத் தொகுதி ஒன்றுக்கு பொருட் கொள்வனவுக்காக எந்த பாதுகாப்புமின்றி சென்றமை அனைவரையும் ஆச்சரியத்திற்குள்ளாக்கியுள்ளது.

திருப்பதியில் உள்ள முன்னணி வர்த்தக நிலையமான TTD வர்த்தக நிலையத்திற்கு திடீரென சென்ற ஜனாதிபதியை கண்ட வர்த்தகர்கள் மற்றும் மக்கள் ஆச்சரியம் அடைந்தனர்.

வெள்ளை நிற ரீ ஷேர்ட் மற்றும் பொது நிறத்திலான காற்சட்டை அணிந்து சென்ற ஜனாதிபதி மைத்ரி வர்த்தக நிலையத்தில் சாதாரண ஒருவரைப்போல் நீண்ட நேரம் அங்கும் இங்கும் சென்று பொருட்களை கொள்வனவு செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை அவர் தேவஸ்தான பூஜைகளில் கலந்துகொண்டதாக சொல்லப்பட்டது