உலகம்

திருச்செந்தூர் கோவிலில் ராஜாத்தி அம்மாள் …!

தனது மகள் கனிமொழி தேர்தல் வெற்றிக்காக திருச்செந்தூர் முருகன் கோவிலில் அவரது தாயாரான ராஜாத்தி அம்மாள்  கும்பிட்டார்.

தனது உறவினர்களுடன் கோவிலுக்கு வந்த அவர் அங்கு நடைபெற்ற பூஜையில் பங்கு பெற்றார் கனிமொழியின் வெற்றிக்காக அவர் வேண்டிக் கொண்டார் என்று தெரிகிறது.

வாழ்நாள் முழுவதும் பகுத்தறிவு பேசிய கருணாநிதியின் மகளும், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவருமான கனிமொழியின் வெற்றிக்காக அவரது தாயார் கடவுளிடம் பிரார்த்தனை செய்வது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.