Breaking News

திருகோணமலை நசுருல்லா தேசிய காங்கிரஸில் இணைந்தார். !

 

திருகோணமலையை சேர்ந்த பிரபல தொழிலதிபரும் நாஸ் பவுண்டேசனின் தலைவருமான பீ.ஜே நசுருல்லா (MBA-அவுஸ்திரேலியா) தேசிய காங்கிரஸின் கொள்கைகளை ஏற்று கட்சியின் தலைவர் ஏ. எல். எம். அதாஉல்லாவின் முன்னிலையில் தேசிய காங்கிரசின் கொழும்பு காரியத்தில் வைத்து இணைந்துகொண்டார்.

தூர நோக்கு சிந்தனையும், சரியான கொள்கையுமுடைய கிழக்கு மண்ணின் மகனாக இருக்கின்ற தேசிய காங்கிரஸ் தலைமை ஏ. எல் . எம் அதாவுல்லாவின் கரங்களைப் பலப்படுத்தி முஸ்லிம்களுடைய இருப்புக்கு தேசிய காங்கிரஸ் தலைமை சரியான வியூகங்களை வகுக்க கூடியவர் என்பதை மக்கள் மயப்படுத்தி சரியானதொரு அரசியல் முன்னெடுப்பை திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்க திருகோணமலை மாவட்ட தேசிய காங்கிரஸின் முக்கியஸ்தர்களுடன் தான் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கட்சிக்கும் , கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருந்து செயற்படப் போவதாகவும் தன் இணைவின் போது தெரிவித்தார்.

சிரேஷ்ட பிரதி செயலாளர் நாயகம் டொக்டர் ஏ.உதுமாலெப்பை, தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எம்.சியா, பொருளாளர் ஜே. எம் பஷீர் உட்பட தேசிய காங்கிரசின் உயர் பீட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் ஜனாதிபதி தேர்தலுக்கான திருகோணமலை தேர்தல் தொகுதிக்கான தேசிய காங்கிரசின் முகவராக பீ.ஜே. நசுருல்லா நியமிக்கப்பட்டார்.

(நூருல் ஹுதா உமர்)