Breaking News

திருகோணமலை கடற்படைத் தளம் அருகே 21 வயது இளைஞர் ஒருவர் வெட்டிப் படுகொலை ! இன்று காலை சம்பவம்

 

திருகோணமலை-துறைமுக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வால் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான நிலையில் ஒருவர் இன்று (16) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-நீதிமன்ற வீதி,வில்லூன்றி பகுதியைச் சேர்ந்த தங்கத்துரை தனுஸ்டன் (21வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யுவதி ஒருவரை  இவர் காதலித்து வந்த நிலையில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட வாக்குவாதமே இதற்கு காரணம் எனவும் படுகாயங்களுக்கு உள்ளானவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும்  தெரியவந்துள்ளது.
 உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
வாளால் வெட்டிய சந்தேகநபர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

(அப்துல் சலாம் யாசீம்)