இலங்கை

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் யாழில் ஆரம்பமானது !

 

– யாழ். செய்தியாளர் –

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர் கூட அருந்தாமல் 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாக தீபம் திலீபனின் 32 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு கட்சி பேதங்களைக் கடந்து மிகவும் உணர்வெழுச்சியுடன் ஆரம்பமாகியது.

நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில், தியாகி திலீபனின் உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்ட நேரமான காலை 9.45 மணிக்கு பொதுச் சுடரேற்றலுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின.