இலங்கை

தியாகி பொன்.சிவகுமாரின் 45வது சிரார்த்த தினம் யாழில் அனுஷ்டிப்பு !

 

– யாழ்.நிருபர் –

தியாகி பொன்.சிவகுமாரன் 45வது சிரார்த்த தினம் இன்று யாழ்ப்பாணம் உரும்பிராயில் நடைபெற்றது.உரும்பிராய் பொதுச்சந்தையில் உள்ள அவரது நினைவிடத்தில் காலை 10 மணிக்கு நடைபெற்றது.

இதில் முதலில் ஒருநிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது .பின்னர் ஈகைச்சுடரை தியாகி சிவகுமாரின் சகோதரி ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவு நாள் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், விந்தன் ,கஜதீபன், தவராசா, ஆனந்தி சசிதரன் உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.