Breaking News

திடீர் ரயில் நிறுத்தத்தால் மக்கள் கொந்தளிப்பு !

இரவு நேர அஞ்சல் ரயில் உள்ளிட்ட பல ரயில் சேவைகள் திடீரென இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் மக்கள் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்ட நிலை நிலவுகிறது.

இன்று நள்ளிரவு முதல் ரயில் பணியாளர்கள் பணி புறக்கணிப்பு மேற்கொள்ளவிருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்திருந்தன.

எனினும் திடீரென ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.