Breaking News

திடீர் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட நுவரெலியா மாவட்டம் – மரண வீட்டிற்கு சென்ற பலர் திருப்பியனுப்பப்பட்டனர் !

– ஹட்டன் ராம் –

நுவரெலியா மாவட்டத்தில் இன்று அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச்
சட்டம் காரணமாக ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், டிக்கோயா ,மஸ்கெலியா, கொட்டகலை,நானுஓயா,நுவரெலியா நகரங்கள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகம் தொண்டமானின் மறைவையொட்டி நகரமெங்கும் வெள்ளைகொடிகள் தொங்கவிடப்பட்டுள்ளன.

அமரர் ஆறுமுகம் தொண்டமானின் பூதவுடன் அன்னாரின் கொத்மலை வெவன்டனிலுள்ள பூர்வீக இல்லத்திலிருந்து (30) நுவரெலியா நானுஓயா தலவாக்கலை வழியாக கொட்கலை சீ.எல்.எப் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டவுள்ளதுடன் பொதுமக்கள் ஆங்காங்கே வீதியின் இரு மருங்கிலும் நின்று அஞ்சலி செலுத்த தயாராகியிருந்தனர். இந் நிலையில் திடீர் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது

வர்த்தக நிலையங்கள் அனைத்தம் முடப்பட்டுள்ள நிலையில் பொது வாகன போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு
மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது

வீதிகள் செல்லும் செல்லும்
வாகனங்களும் பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தபடுகின்ற அதேசமயம் மரண வீட்டிற்கு சென்ற பலர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு திரும்பியனுப்பப்பட்டனர்.

கொரோனா சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியார் எவரும் அனுமதிக்கப்படவில்லை.

 

இதேவேளை மறைந்த அமரர் தொண்டமானின் பூதவுடலுக்கு ரம்பொடையிலுள்ள வெவென்டன் வீட்டில் சமய முறைப்படி இன்று காலை அனுஷ்டான நிகழ்வுகள் இடம்பெற்றன.