உஷ்... இது இரகசியம் !

திடீரென ஊடகவியலாளர்களை பதவி நீக்கிய ஆதவன் !

லைக்கா குழுமத்திற்கு சொந்தமான ஆதவன் ஊடக நிறுவனத்தின் கொழும்பு அலுவலகத்தில் பணியாற்றும் நான்கு சிரேஷ்ட ஊடகவியலாளர்களும் ஒரு நிர்வாக உத்தியோகத்தரும் திடீரென நிறுவன தலைமைப்பீடத்தால் கடமைப் பொறுப்புக்களில் இருந்து பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

செலவைக் கட்டுப்படுத்துவதற்கான ஆட்குறைப்பு என்று இந்த பதவி விலக்கலுக்கு நிர்வாகம் காரணம் கூறியிருப்பதாக அறியமுடிந்தது.அதனால் இதனை ஏற்றுக் கொள்ளுமாறு ஆவணமொன்றில் கையொப்பமிட நிர்வாகம் கேட்டுக் கொண்ட போதிலும் விலக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் அதில் கையொப்பமிட மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

கூடுதலான சம்பளத்துடன் மேலும் பலர் பணியாற்றும் நிலையில், திடீரென இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறித்து அதிர்ச்சியடைந்த இந்த ஐந்து ஊடகவியலாளர்கள் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்ந்து வருவதாக அறியமுடிந்தது.