உலகம்

திசைமாறி பறந்த விமானம்

 

ஜெர்மனிக்கு பறக்க வேண்டிய விமானம் தவறுதலாக திசைமாறி பறந்து ஸ்கொட்லாந்தில் தரை இறங்கி இருக்கிறது.

பிரிட்டீஷ் ஏர்வேஸின் BA 3271 என்கிற விமானம் திட்டமிட்டபடி லண்டன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜெர்மனியில் உள்ள டஸ்ஸல்டோர்வ் (Dusseldorf) விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டும்.

ஆனால் தவறுதலாக லண்டனில் இருந்து பறக்கத் தொடங்கிய் BA 3271, ஜெர்மனிக்கு செல்வதற்கு பதிலாக ஸ்கொட்லாந்தில் தரை இறங்கி இருக்கிறது.

இந்த இரச்னை குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் “ஒரு பெரிய தவறு நடந்து விட்டது. பிர்ட்டீஷ் ஏர்வேஸ் சார்பாக BA 3271 விமானத்தை இயக்கியது WDL Aviation என்கிற ஜெர்மனி நிறுவனம் தான். அவர்கள் எங்களுக்கு கொடுத்த பறக்கும் திட்டத்தில் கூட ஸ்காட்லாந்துக்கு பறப்பதாகத் தான் திட்டம் இருந்தது. அதைத் தான் லண்டன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும் சொல்லி இருக்கிறது.” இப்போது WDL Aviation நிறுவனத்தோடு ஏன் தவறான பறக்கும் திட்டத்தை (Flight Plan) தாக்கல் செய்தீர்கள் எனப் பேசி வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

தனிப்பட்ட முறையில் மன்னிப்பு

“BA 3271 விமானத்தில் பயணம் செய்த ஒவ்வொரு விமானப் பயணிகளிடமும் பிரிட்டீஷ் ஏர்வேஸ் நிறுவனம் தனிப்பட்ட முறையில் பேசி மன்னிப்பு கேட்டிருக்கிறோம்” என பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிர்வாகம் சொல்லி இருக்கிறது. அதோடு லண்ட நகர விமான நிலையமும் தன் ட்விட்டர் பக்கத்தில் BA 3271-ல் பயணித்தவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறது

தவறாக ஸ்கொட்லாந்தின் எடின்பெர்க்கில் தரை இறங்கிய விமானத்தில் உடனடியாக எரிபொருள் நிரப்பப்பட்டு விமானம் அடுத்த 3-வது மணி நேரத்தில் ஜெர்மனியில் தரை இறங்கி இருக்கிறது. ஆக BA 3271 மூன்று மணி நேரம் தாமதமாக ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்வ் விமான நிலையத்துக்குச் சென்று சேர்ந்திருக்கிறது.