உலகம்

தாய்வானுக்கு ஆயுதம் விற்கும் அமெரிக்கா

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் யுத்த தாங்கிகள் மற்றும் ஏவுகணைகளை தாய்வானுக்கு விற்பனைசெய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

இது சீனாவைக் கட்டுப்படுத்தும் முக்கிய நகர்வாக பார்க்கப்படுகிறது.

108 எம்1 ஏ2 டி ஆப்ராம்ஸ் யுத்த தாங்கிகள், அதனுடன் தொடர்புடைய உபகரணங்கள் மற்றும் 250 ஸ்டிங்கர் ஏவுகணைகள் ஆகியன தாய்வானுக்கு விநியோகிப்பதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, காங்கிரஸுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இவை தாய்வானால் கோரப்பட்டதன் அடிப்படையிலேயே வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தாய்வானின் ஜனாதிபதி சாய் இங்-வென் கடந்த மார்ச் மாதம் வாஷிங்டனுக்கு விஜயம் செய்திருந்த போது, இந்த கோரிக்கையை முன்வைத்தார்.