உலகம்

தாய்லாந்தில் துப்பாக்கிக் சூடு 15 பேர் பலி  

தாய்லாந்தில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் பொலிஸ் அதிகாரி உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர்.

இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் தென்பகுதியிலுள்ள சோதனைச் சாவடியொன்றின் மீது இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லையெனினும் இந்த தாக்குதலின் பின்னணியில் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகள் இருக்கலாமென பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளது.

தாய்லாந்தில் அண்மைக்காலத்தில், நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவே  மிகப் பெரிய துப்பாக்கித்தாக்குதல் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிந்து செல்வதற்கான உரிமையைக்கோரி இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பு கடந்த 2004ஆம் ஆண்டு முதல் மேற்கொண்டு வரும் தாக்குலதல் காரணமாக, இதுவரை 7,000 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.