இலங்கை

தாயும் மகனும் தூக்கிட்டு தற்கொலை

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்த பிரதேசத்தில் தாயும் மகனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் 24 வயதுடைய தாயும், 4 வயதுடைய அவரது மகனுமே உயிரிழந்துள்ளதாக கந்தர பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், குறித்த சடலங்கள் இரண்டும் பிரேத பரிசோதனைகளுக்காக மாத்தறை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கந்தர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.