விளையாட்டு

தாமதிக்கும் வீரர்களுக்கு தோனி வழங்கிய தண்டனை

இந்திய ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தோனி செயற்பட்ட போது, பயிற்சிகளுக்கும் கூட்டங்களுக்கும் தாதமாக வருகின்ற வீரர்களுக்கு தண்டனை வழங்கும் திட்டம் ஒன்றை தோனி பின்பற்றியுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் உளவள ஆலோசகர் பெடி அப்டன் இதனைத் தெரிவித்துள்ளார்.
தாமதமாக வருகின்ற வீரர்களுக்கு 10000 ரூபாய் அபராதம் விதிப்பதற்கு, டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவர் அணில் கும்ளே தீர்மானித்திருந்தார்.
இதனை ஒருநாள் கிரிக்கட் அணியின் வீரர்களுக்கும் அமுலாக்கிய தோனி, ஒரு வீரர் தாமதித்தால், அணியின் ஏனைய வீரர்களும் 10000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை அடுத்து, இந்திய கிரிக்கட் அணியின் வீரர்கள் யாரும் பயிற்சிகள் அல்லது கூட்டங்களுக்கு தாமதித்தில்லை என்று பெடி அப்டன் கூறியுள்ளார்.