Breaking News

தாக்குதல்களை ஆராயும் தெரிவுக்குழு இன்று கூடாது – ஒத்திவைப்பு !

 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் இன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரச புலனாய்வுத் துறை , குற்றப் புலனாய்வுத் திணைக்களம் , பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸ் ஆகியவற்றின் உயரதிகாரிகள் இன்று சாட்சியமளிக்கவிருந்தனர். ஆனால் அவர்கள் வேறு சில அலுவல்களுக்கு செல்லவேண்டி இருப்பதாக தெரிவுக்குழுவுக்கு அறிவித்திருப்பதால் இன்றைய கூட்டம் பிறிதோரு தினத்தில் நடத்தப்படும்.

இதற்கிடையில் தாம் நாடு திரும்பும்வரை அதிகாரிகள் தெரிவுக்குழுவிற்கு செல்லக் கூடாதென பாதுகாப்பமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி உத்தரவிட்ட காரணத்தினால் தான் இந்த அதிகாரிகள் இன்று தெரிவுக்குழுவுக்கு செல்லவில்லையென மற்றுமொரு தகவல் தெரிவித்தது.