விளையாட்டு

தவான் பிரித்தானியாவிலேயே தங்கி இருப்பார்.

 

இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சிக்கார் தவான் காயமடைந்துள்ள நிலையில், எதிர்வரும் இரண்டு போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அவருக்கு பதிலாள் ஒருவர் இன்னும் பெயரிடப்படவில்லை.

இதன்படி அவர் பிரித்தானியாவிலேயே தங்கி இருப்பார் என்றும், அவரது காயம் தொடர்பான புதிய பரிசோதனை தகவல் அடிப்படையில் தொடரில் மீள இணைப்பதா? இல்லையா? என தீர்மானிக்கப்படும் என்று இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியின் போது பட் கம்மின்ஸ் வீசிய பந்தில் சிக்கார் தவான் காயமடைந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கட் விதிகளின்படி, காயமடைந்த ஒருவருக்கு பதிலாள் ஒருவர் பெயரிடப்பட்டதன் பின்னர் அவரை மீண்டும் அணியில் இணைப்பதற்கு ஏற்கனவே அணியில் உள்ள ஒருவர் காயமடைந்திருந்தால் மாத்திரமே முடியும்.