விளையாட்டு

தவறு செய்யவில்லை – அஸ்வின் விளக்கம்

தவறு செய்யவில்லை – அஸ்வின் விளக்கம்

பட்லர் ஆட்டமிழந்த பின்னர் ராஜஸ்தான் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் நான் விதிகளின்படியே பட்லரை அவுட் செய்தேன். அதில் தவறு எதுவுமில்லை என்று அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘மன்கட்’ முறையில் பட்லரை அவுட் செய்தது தொடர்பாக பெரிதாக விவாதிக்க வேண்டிய அவசியமில்லை. கிரிக்கெட்டில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்பானது, பட்லரை திட்டமிட்டு இந்தமுறையில் அவுட் செய்யவிலலை. இது இயல்பான ஒன்றாகும்.

நான் செய்த இந்த அவுட் தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. இது போன்ற அவுட்கள் முழுமையாக ஒரு போட்டியின் முடிவை தீர்மானிக்கும். நான் கிரிக்கெட் விதிகளை மீறி பட்லரை அவுட் செய்யவில்லை. இதில் எங்கிருந்து கிரிக்கெட்டின் மதிப்பும், ஆரோக்கியமும் பாதிக்கும் என்று எனக்கு தெரியவில்லை. விதிப்படி விளையாடியது தவறு என்றால் விதியை மாற்ற வேண்டும் அல்லது அதை சரி செய்ய வேண்டும். இவ்வாறு அஸ்வின் கூறினார்.