இலங்கை

தலவாக்கலை மருத்துவ நிலையத்திற்கு சீல் !

தலவாக்கலை நகரில் போலி மருத்துவர் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் நடத்திய மருத்துவ நிலையத்திற்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

தலவாக்கலை நகரில் கடந்த இரண்டு வருடமாக அரச வைத்தியர் என அடையாளப்படுத்திக்கொண்டு ஒருவர் நடத்திய வந்த மருத்துவ நிலையத்தில் கருக்கலைப்பு செய்வதாக நகரசபை தலைவருக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து கடந்த 13 ம் திகதி லிந்துலை தலவாக்கலை நகரசபை தலைவர் மற்றும் தலவாக்கலை பொலிஸாரும் சோதனை நடத்தினர்.

இதன்போது போலி ஆவணங்களை கொண்டு மருத்துவ நிலையம் நடத்திவந்தமை தெரியவந்த நிலையில் இதனை நடத்திவந்த சாய்ந்தமருதி பகுதியை சேர்ந்த போலி வைத்தியர் கைது செய்யப்பட்டு 14 ம் திகதி நுவரெலியா பிரதம நீதவான் நீதிமன்றத்தில் தலவாக்கலை பொலிஸாரினால் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 28 ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பிரபோத ஜயசேகர உத்தரவிட்டார்.

இந் நிலையில், பதில் கடமையாற்றும் அரச உணவு ஔடத பரிசோதகர் என்.சீ.ஜயசேகர, நகரசபை தலைவர் அசோக சேபால, தலவாக்கலை பொலிஸார், சுகாதார பரிசோதகர் இணைந்து இந்த நிலையத்தை சோதனையிட்டபோது போது அரச இலச்சினை, அரச வைத்தியசாலையிலிருக்கும் இருக்கும் இருதய நோய்க்கான மருந்துகள், ஊசிகள் உட்பட பல்வேறு வகையான மாத்திரைகளும் மீட்கப்பட்டள்ளன .

மேற்படி சோதனை நடவடிக்கையைடுத்து போலி மருத்துவனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன் மீட்கப்பட்ட மருந்து வகைகளை அரச இரசாய பகுப்பாய்வு நிலையத்தில் ஒப்படைத்து பகுப்பாய்வு அறிக்கையை நீதிமன்றுக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக உணவு ஔடத பதில் பரிசோகர் என்.சீ ஐயசேகர. தெரிவித்தார்

-நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் கிருஷ்ணா-