Breaking News

தலவாக்கலை தீ விபத்தால் 9 குடும்பங்களின் 45 பேர் நிர்க்கதி

 

தலவாக்கலை பொலிஸ் பிரிவு சென்கிளேயர் ஸ்டேலிங் டிவிசன் லயன் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயினால் 09 குடும்பங்களை சேர்ந்த 45 பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்

04ம் இலக்க லயன் குடியிருப்பே திடீரென தீ பற்றி எறிந்துள்ளது

குறித்த லயன் தொடரில் குடியிருப்பொன்றில் திடீரென தீ பரவிய நிலையில் லயன் தொகுதியில் தீ பரவியுள்ளதுடன் அயலவர்கள் விரைந்து செயற்பட்டு 2 மணித்தியாலங்களின் பின்னர் தீ யை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை. அதேசமயம் உயிராபத்துக்கள் ஏதும் ஏற்படவில்லை. எனினும் பாடசாலை மாணவர்களின் பாடப் புத்தகங்கள் வீட்டு உபகரணங்கள் ஆடைகள் உடமைகள் அனைத்தும் தீயினால் எறிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

தீ விபத்தினால் நிர்கதிக்குள்ளான 09 குடும்பங்ஙளை சேர்ந்த 15 ஆண்கள் 19 பெண்கள் 09 சிறுவர்கள் என 45 பேரை ஸ்டேலிங் தோட்ட பாடசாலையில் தங்க வைக்கும் நடவடிக்கையில் பிரதேசசபை உறுப்பினர்கள் தோட்ட நிர்வாகம் பொலிஸாரும் நடவடிக்கை எடுத்து வருவதுடன் பாதிப்படைந்தவர்களுக்கு உலருணவு பொருட்களை வழங்க நுவரெலியா பிரதேச செயலகம் தோட்ட நிர்வாகம்.லிந்துலை நகர நிர்வாகம் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன.

– நோர்ட்டன் பிரிட்ஜ் நிருபர் – கிருஷ்ணா –