இலங்கை

தற்போது கிடைத்த செய்திகள் !

 

முஸ்லிம் எம்பிக்கள் பேச்சுவார்த்தையில் தீர்மானமில்லை

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே இன்று பாராளுமன்றக் கட்டிடத் தொகுதியில் நடந்த பேச்சு தீர்மானம் இன்றி நிறைவடைந்தது.

மீண்டும் அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்பது தொடர்பில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றிருந்தது.

————————

சட்டமா அதிபரால் பொலிஸ் பதில் மா அதிபருக்கு உத்தரவுகள்

பல்வேறு சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துமாறு, சட்டமா அதிபர் பொலிஸ் பதில் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல், சாய்ந்தமருது தற்கொலை தாக்குதல், மாவனெல்ல புத்தர் சிலை உடைப்புகள் என்பன குறித்து, குற்றப்புலனாய்வுப் பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு என்பன விசாரணைகளை நடத்துகின்றன.

இந்த விசாரணைகளை துரிதமாக்குமாறு பொலிஸ் பதில் மா அதிபருக்கு சட்டமா அதிபரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம், ஜமாதே மிலாது இப்ராஹிம் மற்றும் விலாயட் அஸ் செலானி ஆகிய அமைப்புகள் குறித்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

——————

நாளை நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட ரயில்வே தொழிற்சங்கங்கள் தயாராகி வருகின்றன

—————

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்திக்க இந்தியப் பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை.

கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரை சந்திக்க செல்வதாக வந்த செய்திகளை இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் மறுத்தன.

இப்போதைக்கு அப்படியான சந்திப்பு இல்லையென சொல்லப்படுகிறது .