இலங்கை

தற்கொலைதாரியின் 22 ஏக்கர் காணியை சுவீகரிக்கிறது மாத்தளை பிரதேச சபை !

ஷங்ரி லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதல் நடத்திய இப்றாஹீம் இன்ஸாப்புக்கு சொந்தமான 22 ஏக்கர் மிளகு பயிர்ச்செய்கை காணியை அரசுடைமையாக்குவதற்கு மாத்தளை பிரதேச சபை ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

மாத்தளை பலாபத்வெலையில் இன்று பிரதேச சபை கூட்டம் அதன் தலைவர் கபில பண்டார தலைமையில் நடந்தது.அதன்போது இந்த காணி சுவீகரிப்பு யோசனையை சமர்ப்பித்த உறுப்பினர் நாலக்க பண்டார ,சம்பந்தப்பட்ட காணியை குப்பைகளை கொட்ட பயன்படுத்த முடியுமென தெரிவித்தார்..

விசாரணைகள் நடைபெறுவதால் அவை முடிந்த பின்னர் காணியை அரச அதிபர் ஊடாக சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதேச சபைத் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மாத்தளை ஹத்தமுனகாலவில் உள்ள இந்த காணியை ஆறு மாதங்களுக்கு முன்னர் இன்சாப் கொள்வனவு செய்திருந்தார் .