இலங்கை

தற்கொலைதாரிகள் பயன்படுத்திய 17 வீடுகள் ! ( விசேட வரைபடம் இணைப்பு )

தாக்குதல்களை நடத்திய தற்கொலைதாரிகள் 17 இரகசிய இரகசிய இல்லங்களை பாவித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வண்ணாத்திவில்லு , அம்பாந்தோட்டை , நுவரெலியா ,கண்டி , அழுத்பொல, மல்வானை  , காத்தான்குடி ,வாழைச்சேனை , கட்டுவப்பிட்டி , சரிக்கமுல்ல , கொச்சிக்கடை , தழுவகொட்டுவ ,ஹெட்டிபொல ,கட்டுபொத்த ,நிந்தவூர், சம்மாந்துறை , கல்கிஸை ஆகிய இடங்களில் இந்த வீடுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தற்கொலை தாக்குதல் நடத்திய சந்தேகநபர்கள் பாவித்த தொலைபேசி இலக்கங்களை அடிப்படையாக வைத்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இதேவேளை தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணனி வரைபடம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது