இலங்கை

தற்கொலைதாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி – இராணுவத்தளபதி பகீர் தகவல் !

இலங்கையில் தாக்குதல் சம்பவங்களை நடத்திய தற்கொலைதாரிகளில் சிலர் இந்தியாவுக்கு பயிற்சிக்காக சென்று வந்திருப்பதாக இராணுவத்தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க பி.பி.சி பாகிஸ்தான் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது,

“சந்தேகநபர்கள் இந்தியாவின் கேரளா , பெங்களூர் , காஷ்மீர் பகுதிகளுக்கு சென்றுவந்துள்ளனர் .பயிற்சிகளுக்கு இவர்கள் சென்றிருக்கலாமென அதிகாரிகள் கருதுகின்றனர்.

சந்தேகநபர் அப்துல் லத்தீப் ஜெமீல் 2015 இல் சிரியாவுக்கு சென்று ஐ எஸ் இயக்கத்தில் சேரவிருந்தார். குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய பெரும்பாலானோர் கைதாகியுள்ளனர்.இனி தாக்குதல்கள் நடக்கும் வாய்ப்பில்லை.”

என்றும் குறிப்பிட்டார் இராணுவத் தளபதி